For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிநவீன ஸ்டெல்த் போர் விமான வடிவமைப்பு திட்டப்பணி ஓராண்டில் நிறைவு பெறும்: டிஆர்டிஓ

Google Oneindia Tamil News

டெல்லி: அதி நவீன ஸ்டெல்த் போர் விமானங்களை வடிவமைப்பதற்கான திட்டப் பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் இந்த கனவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்பை நாட டி.ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளது. இந்த ஸ்டெல்த் வகை போர் விமானங்கள், மிகவும் அதி நவீனமானவை, மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. எதிரிகளின் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கக் கூடியவை.

OneIndia Exclusive: India’s stealth fighter dream moves towards reality

நான்காம் தலைமுறை தேஜாஸ் போர் விமானங்களை உருவாக்கியதில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க உதவும் என்று டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரோனாடிக்கல் வளர்ச்சி கழகத்தின் தலைவரான டாக்டர் ஏ.கே.கோஷ், இதுநாள் வரை ஊடகங்களை தவிர்த்தே வந்துள்ளார். ஏரோனாடிக்கல் வளர்ச்சிக் கழகத்தை தொடர்பு கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இதனால் ஏ.எம்.சி.ஏ. திட்டத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் கிடைக்கவில்லை.

OneIndia Exclusive: India’s stealth fighter dream moves towards reality

இருப்பினும், ஏ.எம்.சி.ஏ.திட்டத்தின் வடிவமைப்பு பணியில் 200 வடிவமைப்பாளர்கள் மற்றும் வெளி நிறுவனங்களைச் சேர்ந்த 2000 பேர் பணிக்கப்பட்டுள்ளதாக ஒன் இந்தியாவிடம் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.எம்.சி.ஏ. திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை முடியும் தருவாயில் உள்ளது. சில முக்கிய பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. ஏ.எம்.சி.ஏ. திட்டத்துக்கான உருவமைப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.டி.ஓ. டைரக்டர் ஜெனரல் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

ஏஎம்சிஏ நிறைவேற ஐந்து கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. அவை பிடிபி, விரிவான டிசைன், வளர்ச்சிக் கட்டம், பரிசோதனை, சான்றிதழ் ஆகியவை அதில் அடக்கமாகும். 2020ம் ஆண்டு இறுதியில் பிளைட் டெஸ்ட்டை நடத்தத் திட்டமிட்டு வருவதாக டாக்டர் தமிழ்மணி கூறுகிறார்.

மேலும், அடுத்த ஆண்டு இந்தத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது தொடர்பான மத்திய அமைச்சரவையிந் ஒப்புதலையும் பெற டிஆர்டிஓ முயற்சிக்கவுள்ளது. தற்போது இந்தத் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ. 100 கோடி வழங்கப்பட்டுள்லது. இருப்பினும் பிடிபி கட்டத்திதல் மட்டும் 18 முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகு நிறைய பணிகள் உள்ளன.

2020ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 9 மாதிரிகளை வெளியிடவுள்ளதாக ஏடிஏ இயக்குநர் பி.எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார். பிடிபி முதல் உற்பத்தி வரை தனியாரின் பங்கிளிப்பு விரிவான முறையில் இருக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே ஏஎம்சிஏ திட்டத்தில் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள், ஐஐடிகள், ஐஐஎஸ்சிகள், தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பான விரிவான தகவல்களத் தர டாக்டர் கோஷ் மறுத்துள்ளார். இருப்பினும் பெங்களூர் ஏரோ இந்தியா காட்சியின்போது ஒரு ஸ்ட்டேடிங் மாடல் வைக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

ஏஎம்சிஏவில் இடம் பெறவுள்ள சில முக்கிய அம்சங்கள்

செர்பன்டைன் ஏர் இன்டேக் அதி வேகத்தில் போர்விமானம் செல்லும்போது அதிலிருந்து ஆயுதத்தை சரியான முரையில் விடுவித்தல் ஒருங்கிணைந்த பிளைட் புரபல்சன் கட்டுப்பாடு ஷேர்ட் அபெர்ச்சர்கள் டச் பேனல்களுடன் கூடிய டிஸ்பிளே சிஸ்டம்கள்.

ஏஇஎஸ்ஏ , ரேடார், ஐஆர்எஸ்டி போன்ற அட்வான்ஸ்ட் சென்சார்கள் ஏவுகணை அருகில் வரும்போது எச்சரிக்கை விடுக்கக் கூடிய உபகரணங்கள் ஸ்டெல்த் மெட்டீரியல்கள் அதி நவீன அலுமினியம், டைட்டானியம் அல்லாய்கள் சூப்பர் க்ரூஸ், தொழில்நுட்பம் அட்வான்ஸ்ட் ஏவியானிக்ஸ் பைலட் அசோசியேட் சப்ரஷன் ஆப் எனிமி ஏர் டிபென்ஸ் டெஸ்ட்ரக்ஷன் ஆப் எனிமி ஏர் டிபென்ஸ் பிரிசிஷன் ஸ்டிரைக்

English summary
India's valiant attempt in developing a gen-next stealth fighter seems to be gathering some momentum with the scientists from the Defence Research and Development Organisation (DRDO) claiming that the Project Definition Phase (PDP) will be over within a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X