For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியை ஓபிஎஸ் திடீரென சந்தித்தது இதற்குத்தானாம்

பிரதமர் மோடியுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியுடன் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். ஓபிஎஸ் உடன் அவரது அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

நாட்டின் புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், நாளை பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தவியேற்பு விழாவில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

OPS meets PM Narendra Modi in Delhi

தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

டெல்லியில் ஓபிஎஸ்

டெல்லி சென்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துள்ளார். அவருடன் எம்.பி. மைத்ரயன், முன்னாள் அமைச்சர் செம்மலை, கே.பி. முனுசாமி ஆகியோர் சென்றனர்.

அணிகள் பிளவு

பிப்ரவரி மாதத்தில் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. அப்போது ஓபிஎஸ் அணிக்கு பெரிய அளவில் எம்எல்ஏ, எம்பிக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் அணியில் 12 எம்பிக்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்கள்

ஆறுகுட்டி எம்எல்ஏ திடீரென ஈபிஎஸ் அணியின் பக்கம் சாய்ந்தார். சசிகலா அணி தற்போது ஈபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி என பிளவுபட்டுள்ளது. ஆளுங்கட்சியை ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே குற்றம் சாட்டி பேசி வருகின்றனர்.

அணிகள் இணைப்பில் சிக்கல்

கடந்த மே மாதம் பிரதமர் மோடியை ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்தித்து பேசினர். அப்போது இரு அணிகளும் இணையலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து மீண்டும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இரு அணி தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசியல் நிலவரம்

இன்று டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது அவரது அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினகரன், சசிகலா

டிடிவி தினகரன் செயல்பாடு, பெங்களூரு சிறையில் சசிகலா குறித்த சர்ச்சை, நீட் தேர்வு விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் அணியினர் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தாக கூறப்படுகிறது. அணிகள் இணையுமா? இல்லை சிக்கல் நீடிக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

English summary
Former CM OPS and his camp MP's met PM Narendra Modi at 11:30 am at Parliament.Manoj Pandian, Natham Viswanathan, Munu Sami , Maithreayan, Semmalai met PM in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X