For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார் மாநில போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் – 1000 பேர் அதிரடி கைது!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான தேர்வு கடந்த 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் சுமார் 13 நாட்கள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடைபெற்றது.

அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பதை போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் 200 பேர் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் , "போலீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தங்களுக்கு பணம் அளித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட கூறியதாக" தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணையை தீவிரப்படுத்தும் போது வரும் நாட்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு அவர்களி்ன் பெற்றோர்கள்,உறவினர்கள் உதவியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை இதன்மூலமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After widespread cheating in Bihar's secondary school board examinations hit the headlines, over 1,000 impersonators have been arrested in the state during the screening of documents for constable recruitment exam in the past 13 days, police said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X