For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவாகரத்தான மனைவி மீது ஆசிட் வீசிய கணவருக்கு 46 ஆண்டு சிறை - ரூ. 20 லட்சம் அபராதம்

Google Oneindia Tamil News

லாகூர்: பாகிஸ்தானில் விவாகரத்தான மனைவி மீது ஆசிட் வீசிய கணவருக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் லாகூரை அடுத்த ஹெராகட் நகரை சேர்ந்தவர் மிர்ஷா ஆசிம் பெய்க். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனபோதும், மிர்ஷாவுக்கு மனைவி மீதான கோபம் குறையவில்லை.

Pakistan: Man jailed for 46 years for throwing acid on ex-wife

இதனால், தனது முன்னாள் மனைவி மீது அவர் ஆசிட் வீசினார். இதில், மிர்ஷா மனைவியின் முகம் மற்றும் உடல் வெந்தது. மேலும், அவரது ஒரு கண்ணில் பார்வையும் பறி போனது.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மிர்ஷா அசீம் மீது லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 46 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து. மேலும் அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

English summary
A jealous Pakistani man has been sentenced to 46 years in jail and fined two million rupees by an anti-terrorism court for throwing acid on his ex-wife, leaving her visually impaired with one eye.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X