For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல்கலாம் மறைவுக்கு நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்

Google Oneindia Tamil News

டெல்லி : ஒப்பற்ற தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலாய மாநிலம் ஷில்லாங்கில் நகரில் நேற்று (27-07-2015) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் காலமானர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

kalam

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், சிங்கப்பூர் பிரதமர் லீ சேய்ன் லூங், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் அப்துல் கலாமின் பூத உடலுக்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் மற்றும் இஸ்ரேல் நாட்டுத் தூதர் டேனியல் கர்மோன் இருவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா, மாலத்தீவு தூதர் அகமது முகமது ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர். இதேபோல் உலகத் தலைவர்கள் பலரும் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.

நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா, பிரதமர் மோடிக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில், நேபாள அரசு, நேபாள மக்களின் சார்பில் அப்துல்கலாமின் உறவினர்கள், இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். நேபாளம் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டது. நான் கவுரவமான, சிறந்த பிரமுகரை பறிகொடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Pakistan Prime minister Nawas Sherif and many world leaders condoles Abdulkalam Demise
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X