For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லை தாண்டியதாக 40 குஜராத் மீனவர்களை சிறை பிடித்த பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் 40 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்ற கொடுமை தொடர்ந்து வருகின்றது.

Pakistani Marines capture 40 Indian fishermen off Gujarat

இந்நிலையில் குஜராத் கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் சுமார் 40 பேரை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். அரபிக்கடலில் உள்ள சர்வதேச எல்லையை மீறியதாக மீனவர்கள் 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீனவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மீன்பணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு கடும் பணி காரணமாக சர்வதேச எல்லை சரியாக புலப்படாததால், எல்லையை மீனவர்கள் கடந்திருக்கலாம் எனவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக தேசிய மீன்பணிகள் சங்க செயலர் தெரிவித்துள்ளார்.

English summary
Pakistan's marine security agency captured at least seven Indian fishing boats and 40 fishermen off Gujarat's Jakhau port in the Arabian Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X