For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாகூப் மேமனை விடுவிப்பதே கலாமுக்கு செலுத்தும் அஞ்சலி: ஜனாதிபதிக்கு காந்தியின் பேரன் கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்.

அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த தேசமே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில், மரண தண்டனையை வெகுவாக எதிர்த்த அவருக்கு செலுத்தும் மரியாதையாக, யாகூப் மேமன் கருணை மனுவை ஜனாதிபதி மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

Pardoning Yakub Memon will be a tribute to Kalam: Gopalkrishna Gandhi

அப்துல் கலாம் ஒரு மாதத்துக்கு முன்னதாக பேசியபோதுகூட, மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக கூறியிருந்தார். சட்ட ஆணையத்துக்கு அவர் தனது கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார். எனவே, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதே கலாமுக்கு செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

1997-ல், அப்போதைய ஜனாதிபதி ஷங்கர் தயாள் சர்மா, மஹாஸ்வேதா தேவி போன்ற சான்றோர்கள் பலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆந்திராவைச் சேர்ந்த இருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தார். அதுவும், அவர்களுக்கு தூக்கு விதிக்கப்பட இருந்த முந்தைய நாளில் கருணை செய்தார். இதன் மூலம், அரசியல் சாசன சட்டப் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அவர் முழுமையாக பயன்படுத்தி முன் உதாரணம் செய்திருந்தார்.

யாகூப் மேமன் இந்திய நீதித்துறைக்கு தலைவணங்கி சரணடைந்தார். இந்திய உளவுத்துறையின் மரியாதைக்குரிய அதிகாரி ஒருவர் யாகூப் மேமன் விசாரணைக்கு எப்படியெல்லாம் ஒத்துழைத்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பலரும், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நியாயமாகாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

எனவே யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். யாகூப் மேமனை இந்தியா அழைத்து வந்தபோது அவரிடம் ரகசியமாக என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ அதை மீறுவது ஆகாது.

யாகூப் மேமனை தூக்கிலிட்டால், இந்தியா அமைப்புகளின் நேர்மை நெறி மீது மீளாச் சந்தேகம் ஏற்படும் சூழல் உருவாகும்.

ஏற்கெனவே தங்களிடம் 300-க்கும் மேற்பட்ட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை சார்ந்த அறிஞர்கள் யாகூப் மேமன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளனர்.

15 நாட்களுக்கு முன்னர்தான் சட்ட ஆணையம், தூக்கு தண்டனை தேவையா என்பது குறித்து ஒரு நாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்டது. அந்த கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவு எட்டப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் யாகூப் மேமன் போன்ற கருணைக்காக காத்திருக்கும் பலரது கோரிக்கைக்கும் பின்னால் இருக்கும் நியாயம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியானால் புரியவரும்.

இக்கடிதத்தை அவசரம் கருதி, பொதுநலன் கருதி இப்போது நான் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு கோபாலகிருஷ்ணகாந்தி மனுவில் கூறியுள்ளார்.

English summary
Former Governor of West Bengal, Gopalkrishna Gandhi urged a reconsideration of the rejection of Yakub Memon's mercy plea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X