For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.பிக்களின் சம்பளத்தை "டபுள்" ஆக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை

Google Oneindia Tamil News

டெல்லி: எம்.பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கு அதிகரிக்கவும், எம்.பிக்களுக்கான சம்பள நிர்ணயத்தை குறிப்பிட்ட காலக்கெடுவில் திருத்தியமைக்கவும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்திலும் 75 சதவீத உயர்வை அது பரிந்துரைத்துள்ளது.

Parliament panel wants doubling of pay, automatic pay revision mechanism for MPs

இதுதொடர்பான அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு தற்போது சம்பளக் கமிஷன் இருப்பதைப் போல எம்.பிக்களுக்கும் ஒரு கமிஷனை நிறுவி குறிப்பிட்ட இடைவெளியில் சம்பள உயர்வை தானாகவே மேற்கொள்ளவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவானது மொத்தம் 60 பரிந்துரைகளைக் கூறியுள்ளது. கடைசியாக 2010ம் ஆண்டு எம்.பிக்களின் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல டிஏ , எம்.பிக்ளுக்கு வழங்கப்படுவதில்லை ன்றும் கமிட்டி கூறியு்ளது.

தற்போது ஒரு எம்.பி மாதச் சம்பளமாக ரூ. 50,000 பெறுகிறார். இதை அப்படியே டபுள் ஆக்க கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

Parliament panel wants doubling of pay, automatic pay revision mechanism for MPs

எம்.பிக்களுக்கான தினசரி படியை ரூ. 2000 என்பதிலிருந்து அதிகரிக்கவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. எம்.பிக்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கும்போது தினசரி படி அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த உயர்வானது நீண்ட காலக் கோரிக்கையாகும். தினசரி எங்களைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு டீ கொடுத்தாலே கூட ஒரு நாளைக்கு ரூ. 1000 வரை செலவாகி விடுகிறது. ஆனால் நம்மைத் தேடி வருவோருக்கு வெறும் டீயுடன் நின்று விட முடியாதே. எனவே தினசரி படியை அதிகரித்தால் நல்லது என்று ஒரு பாஜக எம்.பி கூறியுள்ளார்.

இந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தவர் பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.பி. யோகி ஆதித்யநாத் ஆவார். இவர் பரிந்துரைத்துள்ள பிற பரிந்துரைகள்:

முன்னாள் எம்.பிக்களுக்கு விமான கட்டணத்தில் 20 முதல் 25 சதவீத சலுகை தரப்பட வேண்டும். இது வருடத்திற்கு ஒருமுறை தரப்பட வேண்டும்.

முன்னாள் எம்.பிக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 20,000 என்பதிலிருந்து மாதம் ரூ. 35,000 என்றஉ உயர்த்த வேண்டும்.

ஒவ்வொரு சிட்டிங் எம்.பிக்Kளும் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏசி பெட்டியில் பயமிக்கக் கூடிய பாஸ் வழஹ்கப்பட வேண்டும். இது அவருடன் வரும் தனிச் செயலாளருக்காக வழஹ்கப்பட வேண்டும்.

தற்போது எம்.பிக்களும், அவர்களது கணவன் அல்லது மனைவிக்கு மட்டுமே இலவச பாஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்த்கது. இதை செயலாளருக்கும் நீட்டிக்க கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

மேலும் எம்.பிக்களுக்கான பாக்கெட் மணியாக தற்போது ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்டுக்கான கட்டணம் தரப்படுகிறது. அதை முதல் வகுப்பு ஏசி டிக்கெட் கட்டணமாக மாற்ற வேண்டும்.

கமிட்டி கொடுத்துள்ள பல கோரிக்கைகள் மக்களின் வரிப்பணத்தை காலி செய்யும் வகையில் உள்ளதாகவும், எனவே இதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

English summary
A parliamentary panel has recommended doubling the salary of law makers and also increasing pension of former MPs by almost 75%. The joint committee, which has submitted its recommendations to the government, has also proposed an automatic pay revision mechanism for parliamentarians like that of pay commission for government employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X