For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதன்கோட்டில் எங்கு செல்லலாம், யாரிடம் விசாரிக்கலாம்..? பாக். விசாரணை குழுவிற்கு பல கட்டுப்பாடு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டீகர்: பதன்கோட் விமான தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு காரணம், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

எனவே, இந்த விவகாரத்தை விசாரிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. தனது விசாரணை குழுவை அனுப்பி விசாரிக்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அரசு சம்மதித்தது. இதையடுத்து, பதன்கோட்டுக்கு இன்று பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு வந்துள்ளது.

பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு, பதன்கோட் விமான தளத்தில் எந்த அளவுக்குள் மட்டும் விசாரணை நடத்த முடியும் என்பதை பாதுகாப்பு படை வரையறுத்து வைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் படையினருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆய்வு செய்ய அனுமதி கிடையாது.

Pathankot- List of do's and dont's for the Pakistan JIT- Filing
  • தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதிகளில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். வேறு எந்த பகுதிக்குள்ளும் அனுமதி கிடையாது.
  • தாக்குதலுக்கு முன்பாக ஒருநாள் இரவு தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை பார்க்க அனுமதியுண்டு.
  • இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் நுழைந்த பகுதியை ஆய்வு செய்ய அநுமதிக்கப்படும்.
  • இகாகர் சிங் என்ற டாக்சி டிரைவரை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து டாக்சியை பறித்து சென்ற இடத்தில் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படும்.
  • குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கடத்தப்பட்ட பகுதி காண்பிக்கப்படும்.
  • தேசிய பாதுகாப்பு படை, இந்திய விமானப்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் பாகிஸ்தான் விசாரணை குழு விசாரிக்க இந்தியா அனுமதிக்காது.
  • பஞ்சாப் எஸ்.பியிடமும், அவரின் நண்பர் ராஜேஷ் வர்மா மற்றும் சமையல்காரர், மதன் கோபால் ஆகியோரிடமும் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 17 சாட்சியங்களிடம் விசாரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
English summary
The Joint Investigation Team is at Pathankot to probe the terror attack on the air force station. The team which arrived at Pathankotamidst protests by the Congress and the Aam Admi Party have a stringent set of rules to follow. There are various aspects to this probe and the NIA has decided what the JIT can access and what they cannot. An NIA official part of the Pathankot probe tells OneIndia that only select areas will be accessible. There are steps taken to ensure that he also added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X