For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் பாஜக எம்.பி., பதவி நீக்கம்: கோர்ட் அதிரடி உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சேதி பஸ்வானை எம்.பி பதவியில் இருந்து பாட்னா நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் சாராசங் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சேதி பஸ்வான். இவர் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தன்மீதான குற்ற வழக்குகளை மறைத்து பிராமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

Patna High Court revokes membership of Sasaram BJP MP Chhedi

இதுதொடர்பாக சேதி மீது பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சேதி பஸ்வானின் வெற்றி செல்லாது எனக் கூறி அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து சேதி பஸ்வான் கூறுகையில், வேட்பு மனுவில் வேண்டும் என்றே எதையும் நான் மறைக்கவில்லை. எந்த தகவலையும் மறைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. என்னிடம் மறைக்க எதுவுமில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்வேன் எனக் கூறினார்.

English summary
The Patna High Court Thursday cancelled the Lok Sabha membership of BJP MP from Sasaram Chhedi Paswan over concealing information in his election affidavit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X