For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோலுக்கு பதிலாக காற்றை நிரப்பும் பங்க்! வீடியோவால் அம்பலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டீகர்: பெட்ரோல் பங்குகளில் விதவிதமான மோசடிகள் அரங்கேறுவது சகஜமாகிவிட்டது. ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பதை போல பெட்ரோல் பங்கிலுள்ள மீட்டரிலும் சூடு வைத்த விவகாரம் வீடியோவாக பரவி வருகிறது.

பஞ்சாப்பிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் வழக்கமாக பெட்ரோல் போடவரும் ஒரு வாடிக்கையாளருக்கு, அந்த பெட்ரோல் பங்க் அளிக்கும் பெட்ரோலின் அளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மற்ற பங்குகளில் பெட்ரோல் போடுவதற்கும், இங்கு போடுவதற்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தார்.

4 லிட்டர் பெட்ரோல் போட்டால், 3 லிட்டர் அளவுக்குதான் மைலேஜ் வருவதை கவனித்துள்ளார். இதையடுத்து போலீசாரின் உதவியுடன் அந்த பெட்ரோல் பங்கில் சோதனை நடத்தியபோது, ஒரு ரகசியம் அம்பலமானது.

அதாவது, குழாயில் பெட்ரோல் வெளியே வராவிட்டாலும்கூட மீட்டர் மட்டுமே ஓடக்கூடிய நவீன டெக்னாலஜியை அந்த பங்க் நிர்வாகிகள் கையாண்டுள்ளது அப்போதுதான் தெரியவந்தது. தேவர்மகன் திரைப்படத்தில் வரும் பாடலை போல "வெறும் காத்துதாங்க வருது" என்று வாடிக்கையாளர்களும் பாட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது அந்த பெட்ரோல் பங்க். இந்த வீடியோவை பார்த்தால் மோசடியை புரிந்துகொள்ள முடியும்.

English summary
A petrol retail outlet in Punjab indulging fraud by selling air instead of petrol which act now caught on camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X