For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண பிரச்சினை.. கொஞ்ச கால கஷ்டம், நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.. மக்களுக்கு மோடி வேண்டுகோள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பண மதிப்பிழப்புக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பண மதிப்பிழப்புக்கு பிறகு, மக்கள் பண சப்ளையின்றி தவித்து வரும் நிலையில், டிவிட்டரில் தொடர்ச்சியாக மோடி சில கருத்துக்களை இன்று வெளியிடுள்ளார்.

PM defends demonetisation

அவர் கூறுகையில், ஊழலுக்கு, தீவிரவாதத்திற்கு, கருப்பு பணத்திற்கு எதிரான யாகத்தில் பங்கேற்றுவரும் மக்களுக்கு எனது வீர வணக்கம். அரசின் முடிவால் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் ஆகிய இந்தியாவின் முதுகெலும்புகளுக்கு நன்மை. கிராமப்புற இந்தியாவில் ஊழலும், கருப்பு பணமும் ஒழிக்கப்படும். நமது கிராமங்கள் அவர்களுக்கான பங்கை பெற வேண்டும்.

இந்தியாவை கருப்பு பணம் இல்லாத நாடாக மாற்றவும், பண பரிவர்த்தனையற்ற நாடாக மாற்றவும், நடுத்தர, ஏழை மக்கள் மேம்படவும் நீங்கள்தான் எனது நம்பிக்கையாளர்கள். இப்போது கிடைத்துள்ளது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். சில நாட்கள் கஷ்டப்பட்டாலும், நமது நாடு வருங்காலத்தில் பெரும் வளர்ச்சியடைய இது உதவும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

மோடியின் இந்த கருத்துக்கள், அவர் பண மதிப்பிழப்பு பிரச்சினையில் பின்வாங்க போவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொடர்ந்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார் மோடி.

English summary
In a series of tweets, the PM again defended his decision to scrap high value currency, but this time focussed on its benefit for rural India and wage labourers, the people who have been the most affected by the cash crunch .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X