For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக் கோள்...இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி : ஜிசாட்-6 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் இன்று மாலை 4.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

gslv

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், தற்போது ஜிசாட்-6 என்ற தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 9-வது ராக்கெட். அதேபோல ஜிசாட் வரிசையில் இது 25-வது செயற்கைக்கோள் ஆகும்.

ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது.
தற்போது, தகவல் தொழில் நுட்பபயன்பாட்டுக்காக செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-6 செயற்கைக் கோள் ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த எடை 2,117 கிலோவாகும். இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 35,975 கிலோ மீட்டரும் கொண்ட தாற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.

ஜிசாட்-6 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் ஒரு வியத்தகு சாதனையை படைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Thursday congratulated the Isro team on the successful launch of the country's latest communication satellite GSAT-6, terming it as a "phenomenal accomplishment".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X