For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யா உள்பட 5 'தான்' நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கிளம்பினார் மோடி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட ஆறுநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து கிளம்பினார்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான் ஆகிய ஆறு நாடுகளில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து உஸ்பெகிஸ்தான் கிளம்பினார். அங்கிருந்து அவர் நாளை கஜகிஸ்தான் செல்கிறார். அதன் பிறகு 8ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார்.

PM Modi departs for six nation tour

பின்னர் 10ம் தேதி துர்க்மினிஸ்தான் செல்லும் அவர், 11ம் தேதி கிர்கிஸ்தானிலும், 12ம் தேதி தஜிகிஸ்தானிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவில் உள்ள உபாவில் நடக்கும் எஸ்.சி.ஓ. மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பு தான் எஸ்.சி.ஓ.. சீனா தலைமையில் செயல்படும் அந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராகக்கூடும் என்று கூறப்படுகிறது.

மோடி உபா நகரில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். மோடியின் சுற்றுப்பயணத்தின்போது பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு கேஸ் கொண்டு வர துர்க்மினிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா(டிஏபிஐ) திட்டத்தை விரைவில் செயல்படுத்த மோடி வலியுறுத்த உள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi today left on an eight-day visit to five Central Asian countries as also Russia, aiming to enhance strategic, economic and energy ties besides attending Summits of BRICS and Shanghai Cooperation Organisation (SCO).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X