For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மோடி இரங்கல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

PM Modi Mourns Soldiers Who Died j&k

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், இறந்த பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குவதாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங், மனோஜ் பாரிக்கர் இரங்கல்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திகிறேன் என்றார்.

மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோஜ் பாரிக்கர் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

English summary
PM Modi mourned the death of soldiers in j&k
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X