For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகாரில் மகாபோதி கோவிலில் மோடி... போதி மரத்தடியில் பிரார்த்தனை

By Mathi
Google Oneindia Tamil News

கயா: பீகாரில் உள்ள மகாபோதி கோவிலில் பிரதமர் மோடி இன்று வழிபாடு நடத்தினார். அங்குள்ள போதி மரத்தடியில் அவர் பிரார்த்தனை மேற்கொண்டார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 3 நாட்களாக சர்வதேச இந்து-புத்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை புத்த காயாவிற்கு வந்தார்.

PM Modi offers prayer at Mahabodhi temple in Bodh Gaya

புத்தகாயாவிற்கு வந்த பிரதமர் மோடியை அம்மாநில ஆளுநர் ராம்நாத் கோவ்ந்த் மற்றும் அம்மாநில அமைச்சர் ஷியாம் ரசாக் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பீகாரில் உள்ள பிரபலமான மகாபோதி ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்.

PM Modi offers prayer at Mahabodhi temple in Bodh Gaya

முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாயைத் தொடர்ந்து புத்த கயாவுக்கு சென்ற 3-வது பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான், நேபாள், பூட்டான், இலங்கை, மியான்மர், தைவான் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து புத்த பிட்சுகள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றுள்னர்.

PM Modi offers prayer at Mahabodhi temple in Bodh Gaya

பல்வேறு நாட்டு தலைவர்களை வருகையை முன்னிட்டு பீகார் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
PM Modi visited Bodh Gaya on Saturday and prayed at the Mahabodhi temple, Buddhism's holiest shrine, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X