For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுரேனியம் வழங்க விரைவில் முடிவெடுக்க வேண்டும்.. உஸ்பெகிஸ்தானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்..

Google Oneindia Tamil News

தாஷ்கண்ட் : இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட மோடி, முதல் கட்டமாக உஸ்பெகிஸ்தான் சென்றார். தலைநகர் தாஷ்கண்டில் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

modi

தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அதிபருடன், மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

உஸ்பெகிஸ்தான் நாட்டுடன் தொடர்ந்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து உஸ்பெகிஸ்தான் விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தெடர்ந்து, பிரதமர் மோடி பேசியாவது...

இன்று மத்திய ஆசியாவில் உள்ள 5 நாடுகளின் சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளேன். இது மத்திய ஆசிய நாடுகளுடன் உறவை பலப்படுத்த வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்தியா முதலீட்டாளர்களுக்காக சாதகமான கொள்கைகள் வேண்டும். இதனை அதிபர் இஸ்லாம் கரிமோ ஏற்றுக்கொண்டுள்ளார்.

சமீப காலமாக இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும், பரஸ்பர நம்பிக்கை, நலன்கள் அடிப்படையில் உறவை வளர்த்துக்கொண்டுள்ளது. இந்தியாவையும், உஸ்பெகிஸ்தானின் நலன்களை இணைக்கும்வகையில், இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்திய கலாசாரத்தையும், இந்தி மொழியையும் பாதுகாப்பதில், உஸ்பெகிஸ்தானுடன் சில நாடுகளை மட்டுமே ஒப்பிட முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

English summary
India and Uzbekistan on Monday decided to boost ties in key areas of atomic energy, defence and trade during "productive" talks between Prime Minister Narendra Modi and Uzbek President Islam Karimov
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X