For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டும் மழையில்.. ஆயிரக்கணக்கானோருடன் யோகா செய்த மோடி #InternationalYogaDay

Google Oneindia Tamil News

லக்னோ: லக்னோவில் இன்று நடைபெற்ற 3வது சர்வதேச யோகாசன தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, 55,000க்கும் மேற்பட்டோருடன் யோகா செய்தார்.

மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் பிரதமர் உள்ளிட்டோர் யோகா செய்தனர். பிரதமருடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் சபா ஸ்தல் மைதானத்தில் இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நாட்டுத் தூதர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

2015 முதல்

2015 முதல்

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐநா. அறிவித்தது. இதையடுத்து 2015ம் ஆண்டு முதல் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மோடி செய்த யோகா

மோடி செய்த யோகா

பிரதமர் யோகா செய்வதையொட்டி யோகா நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைப்பு

ஒருங்கிணைப்பு

முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், யோகாசனம் நமது மனதையும், ஆன்மாவையம் ஒருங்கிணைக்கிறது. உலகத்தையும் தற்போது இணைத்துள்ளது.

உப்பு மாதிரி யோகா

உப்பு மாதிரி யோகா

நமது உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உடம்பு நன்றாக இருந்தால்தான் ஆரோக்கியம் நன்றாக இருக்க முடியும். சாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத்தான் வாழ்க்கையில் யோகாவும் என்றார் மோடி.

English summary
PM Modi attended the 3rd International Yoga day at Lucknow. More than 55,000 attended the same and performed the Yogasana along with PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X