For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் பெண்ணை வைத்து பணக்காரர்களிடம் பணம் பறித்து வந்த 3 கான்ஸ்டபிள்கள்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் ஒரு பெண் மூலம் பல தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை காம வலையில் விழவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த 3 கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்தவர்கள் கான்ஸ்டபிள்களான பசவராஜ் மதபாதி, முகமது இல்யாஸ் மற்றும் விஜய குமார். அவர்கள் கொடிகேஹள்ளியில் வசிக்கும் 25 வயது பெண்ணான யாஸ்மீன் என்பவரை வைத்து தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு போன் செய்து நைசாகப் பேசி அவரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

யாஸ்மீன் வீட்டிற்கு வந்தவர்களும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் யாஸ்மீனின் வீட்டில் மறைத்து வைக்கப்படிருந்த மேராவில் பதிவாயிகியிருந்தது. யாஸ்மீனுடன் அவர்கள் நெருக்கமாக இருந்த வேளையில் அந்த 3 கான்ஸ்டபிள்களும் அங்கு திடீர் என சோதனைக்கு வருவது போன்று வந்து தங்களை நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் என அறிமுக செய்து கொண்டு தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை வழக்குப்பதிவு செய்வோம் என்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

Policing the police in Bengaluru- Cops running honey trap racket busted

இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடப்பா என்பவருக்கு போன் செய்த யாஸ்மீன் நிலம் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடப்பா மற்றவர்களை போன்று யாஸ்மீனின் ஆசை வார்த்தைக்கு மயங்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த கான்ஸ்டபிள்கள் வெங்கடப்பா யாஸ்மீனிடம் மயங்காததை பார்த்துவிட்டு வம்படியாக அவரது சட்டையை கழற்றி யாஸ்மீனுடன் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

ரூ. 2 லட்சம் அளிக்காவிட்டால் புகைப்பட ஆதாரத்தை வைத்து வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளனர். முதலில் வெங்கடப்பா பயந்து போய் ரூ.25 ஆயிரமும், ஒரு காசோலையும் அளித்துள்ளார். காசோலை வேண்டாம் என்று கூறிய அந்த 3 பேரும் வெங்கடப்பாவை பணத்தை எடுத்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.

அங்கிருந்து கிளம்பிய வெங்கடப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு தனது நண்பரான போக்குவரத்து போலீஸ்காரரை அணுக அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று 3 கான்ஸ்டபிள்களிடம் அளிக்குாறு அளியுங்கள் நாங்கள் வந்து அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். வெங்கட்பபாவும் அவ்வாறு செய்ய 3 கான்ஸ்டபிள்களும் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக இப்படி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

English summary
Policing the police. This is what one can say about a case busted by the Bengaluru police in which three constables were found to be posing as sleuths of the CCB and running a honey trap racket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X