For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெருமிதம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவிய போதும், இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவின் 68வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

 President Pranab Mukherjee Republic Day speech

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய குடியரசு தின உரையின் முக்கிய அம்சங்கள்:

-இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

-குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் 2 மடங்காக உயர்ந்துள்ளது.

-சராசரி தனிநபர் வருமானம் 10 மடங்காக அதிகரித்துள்ளது.

-பணமதிப்பிழப்பால் தற்காலிக தேக்க நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

-சுதந்திர இந்தியாவில் கல்வி அறிவு 4 மடங்காக அதிகரித்துள்ளது.

-வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

-விண்வெளி ஆய்வில் உலக அளவில் இந்தியா 6வது இடத்தை பெற்றுள்ளது.

-ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமைகள் உள்ளதைப் போல் மக்களுக்கு கடமைகளும் உள்ளது

-இன்றைய இளைஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

-நாட்டை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு வகுத்துள்ளது.

-ராணுவ பலத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது

-சமுதாய, கலாசார பன்முகத் தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் வலிமை.

-நீடித்த பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

-2014 தேர்தலில் 66 சதவீதம் வாக்கு பதிவானது நமது வலிமையை காட்டுகிறது

-தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தற்போது சரியான நேரம்.

-ஜனநாயகத்தை மேம்படுத்த நுண்ணறிவுடன் கூடிய பார்வை தேவை.

-தொழில் துறையில் 10 வது இடத்தில் உள்ளோம்.

-ஊரக பொருளாதார வேலை வாய்ப்பு திட்டங்களை அதிகரிக்க வேண்டும்

English summary
We are the fastest growing economy, says president Pranab Mukherjee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X