For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிளால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தில் பிறந்த மீராகுமார் மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் மகள் ஆவார். 1973ஆம் ஆண்டு, இந்திய வெளியுறவு பணி அதிகாரி ஆனார். ஸ்பெயின், இங்கிலாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

Presidential Election 2017: Opposition's nominee Meira Kumar gets Z plus

காங்கிரஸ் கட்சியில் இணைந்த மீரா குமார், 1985ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. ஆனார். அந்த தேர்தலில், இதர தலித் தலைவர்களான மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தோற்கடித்தார்.

நான்கு முறை எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு, மத்திய அமைச்சர் ஆனார். 2009ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை லோக்சபா சபாநாயகராக பணியாற்றினார். நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியினரில் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மீரா குமாருக்கு இதுவரை எக்ஸ் பிரிவு பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நாட்டின் உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கமாண்டோ படை பிரிவு வீரர்கள் 36 பேர், அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கும் ஏற்கனவே இசட் பிளஸ் பாதுபாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கமாண்டோ பாதுபாப்பு படை வீரர்கள், பைலட் செக்யூரிட்டி புடை சூழ, எம்எல்ஏக்கள், எம்பிக்களிடம் ஆதரவு கோரி பயணம் கிளம்பி விட்டார் ராம்நாத் கோவிந்த்.

English summary
The security cover of the opposition's presidential nominee Meira Kumar has been upgraded to the top most 'Z+' category.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X