குடியரசுத் தலைவர் தேர்தல்.. தமிழகத்தைச் சேர்ந்த பத்மராஜன் உள்பட 6 பேர் மனுத் தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு, முதல் நாளில் 6 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

குடியரசுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒரு பெண் உள்பட 6 பேர் மனுதாக்கல் செய்தனர். எந்தத் தேர்தலாக இருந்தாலும் மனுத் தாக்கல் செய்யும் தமிழகத்தின் பத்மராஜனும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு கொடுத்துள்ளார்.

இவர்களில் 3 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Presidential election: 6 candidates filed on first day

அவர்கள் விவரம்:

பத்மராஜன் (சேலம் மாவட்டம், தமிழகம்)

சாய்ரா பானு (அந்தேரி, மும்பை - மராட்டியம்)

முகமது படேல் அப்துல் ஹமீது (மும்பை, மராட்டியம்)

கொண்டேகர் விஜயபிரகாஷ் (புனே, மராட்டியம்)

ஆனந்த் சிங் குஷ்வாகா (குவாலியர், மத்திய பிரதேசம்)

பாலா ராஜ் (மெஹபூப் நகர், தெலங்கானா)

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
There are 6 candidates have filed nomination on the first day for the Presidential poll.
Please Wait while comments are loading...