For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரியங்கா காந்தி இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆகிறாரா?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரியங்கா காந்தி வாத்ரா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆக்கப்பட உள்ளார் என்று வெளியான தகவலை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ராவை கட்சிப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வைக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரியங்கா காங்கிரஸ் பொதுச் செயலாளராக மார்ச் 2ம் தேதி நியமிக்கப்படுகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் இதை பிரியங்காவின் அலுவலகத்தார் மறுத்துள்ளனர்.

Priyanka Gandhi's office denies reports of her appointment as Congress' general secretary

ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரின்போது 2 வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். இது பிற கட்சிகள் விமர்சிக்க வழிவகுத்துள்ளது. இதற்கிடையே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் ஆக்கப்பட உள்ளார் என்று வேறு கூறப்படுகிறது.

ராகுல் காந்தி வலுவுடனும், புதுத் தெம்புடனும் திரும்பி வருவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். கட்சியை புதுப்பிப்பது குறித்து ராகுல் கடந்த சில மாதங்களாகவே கட்சி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆலோசனை நடக்கி வந்துள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் கட்சியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

ராகுலை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், அவரை கட்சி தலைவராக்க வேண்டும் என்றும் கட்சியினர் கருதுகிறார்களாம்.

English summary
Priyanka Gandhi's office rubbished the news that she is going to be appointed as the general secretary of congress on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X