For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் செயல் தலைவராக நியமனமா.. பிரியங்கா காந்தி மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பிரியங்கா காந்தி நியமனம் என வெளியான தகவலுக்கு அவரது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவிக்குப் பிரியங்கா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை பிரியங்கா காந்தியின் உதவியாளர் சகாய் மறுத்துள்ளார்.

கடந்த 8ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியின் பெயர் கட்சியின் செயல் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியானது.

Priyanka Gandhi takes charge as Congress working president, PA refuses

லோக் சபா தேர்தலில் பிரியங்கா காந்தியை களம் இறக்கினால் வெற்றி வாய்ப்பு கட்டாயம் கிட்டும் என்ற வியுகத்தில் பிரியங்கா காந்தி செயல்தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும், இதன் அதிகாரப் பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியது.

இந்தத் தகவல் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரியங்கா காந்தியின் உதவியாளர் பி. சகாய் மறுத்து விளக்கம் அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை செயல் தலைவராக நியமிக்கும் ஆலோசனை நடைபெறவே இல்லை என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இது தொடர்பான எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
Priyanka Gandhi takes charge as Congress working president, P. Sahay, PA of Priyanka Gandhi refused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X