ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.. பெங்களூர் சிறைக்குள் கைதிகள் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றிய ரூபா பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் மத்திய சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக டிஐஜி ரூபா, காவல்துறை டிஜிபிக்கு அனுப்பிய அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Roopa

இந்த நிலையில், ரூபா இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் டிராபிக் பிரிவு கமிஷனராக நியமிக்கப்படார். இதை அறிந்ததும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சிறைக்குள் அதிகாரிகள் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், தங்களை சந்திக்க வரும் உறவினர்களிடம் போலீசார் காசு வசூலிப்பதாகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். ரூபா மூலமாக தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்பியிருந்ததாகவும், அவரை பணியிடமாற்றம் செய்தது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Sasi left from jail 3 times?-Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Protests break out inside Parappana Agrahara Central Jail in Bengaluru over DIG D Roopa’s abrupt transfer.
Please Wait while comments are loading...