For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் கிஸான் விகாஸ் பத்திரம்- காங்கிரஸ் காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

கிஸான் விகாஸ் பத்திரத்தை வெளியிட்டு, உள்நாட்டில் கருப்புப் பணத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. கருப்புப் பணத்தை மீட்போம் என்று பேசிய அரசு, தற்போது கருப்புப் பணத்தை ஊக்குவிக்கிறது.

பண மோசடி, நிதி தீவிரவாதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கிஸான் விகாஸ் பத்திரத்தை ரத்து செய்யும்படி சியாமளா கோபிநாத் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் முந்தைய அரசால் கிஸான் விகாஸ் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கருப்புப் பணத்தை மீட்போம் என்றும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் பேசி வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு கிஸான் விகாஸ் பத்திரத்தை மீண்டும் வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கு உள்ளேயே கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் வகையில் கிஸான் விகாஸ் பத்திரத்தை மத்திய அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது. கிஸான் விகாஸ் பத்திரம் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளிக்க வேண்டும்,

இவ்வாறு அஜய் மக்கான் கூறியுள்ளார்

ஏப்பம் விட்ட மல்லையா

ஏற்கனவே தொழிலதிபர் மல்லையாவுக்கு ஸ்டேட் வங்கி தலைமையில் பல வங்கிகள் கடனாக தந்த ரூ. 3,500 கோடிக்கும் அதிகமான நிதி 'சுவாகா' ஆகிவிட்டது என்பதும் நினைவுகூறத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

இதனிடையே பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு கடனுதவி அளித்தது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா விளக்கம் அளித்துள்ளார். பிரதமரின் ஆஸ்திரேலிய பயணத்தின்போது அந்நாட்டில் நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட பாரத ஸ்டேட் வங்கி, அதானி குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும். வங்கியின் இயக்குனர் வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே கடன் அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்

English summary
The Congress questioned the propriety and timing of an SBI plan to consider loaning $1 billion (Rs 6,200 crore) for a controversial mining project in Australia led by industrialist Gautam Adani, perceived to be close to Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X