For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தமில்லாமல் குஜராத்தை 'ஓவர்டேக்' செய்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஜிடிபியை பொறுத்த வரை மோடியின் குஜராத்தை விட தமிழகம் முன்னணியில் உள்ளது.

மோடி குஜராத் முதல்வராக இருக்கையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கள் மாநிலத்தில் அவர்களை தொழில் துவங்க ஊக்குவித்தார். தற்போதும் ஆண்டு தோறும் எழுச்சிமிகு குஜராத் மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் கலந்து கொண்டார்.

Quietly, Maharashtra, Tamil Nadu Outrace Gujarat

குஜராத்தில் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிரா மாநிலமோ சத்தமில்லாமல் அதிக முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது.

2012-2013ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் ரூ. 4 லட்சத்து 96 ஆயிரத்து 953 கோடி முதலீடுகளை பெற்றுள்ளது. இதே சமயத்தில் குஜராத் ரூ. 4 லட்சத்து 86 ஆயிரத்து 38 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில் தமிழம் ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 260 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.

ஜிடிபியை(நாட்டின் மொத்த உற்பத்தி) பொறுத்தவரை தமிழகம் தொடர்ந்து குஜராத்தை விட முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை விட மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

2004-2005ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஜிடிபியில் குஜராத்தை தமிழகம் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When it comes to capital investment Maharashtra has taken over Gujarat and in terms of GDP TN is ahead of PM's state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X