For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3வது ஆண்டில் மோடி அரசு.. நாட்டை விட்டு வெளியேறுவேன், மோடியால் முடியாது என சொன்னவர்கள் எங்கே?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி பிரதமராக பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் பிரதமராக வாய்ப்பே இல்லை என பெரிய தலைவர்கள் பலர் கூறிய செய்திகள் நாளிதழ்களின் தலைப்பு செய்திகளாக வெளியான தருணங்கள் பலருக்கும் நினைவு உள்ளது.

நரேந்திர மோடி அபார வெற்றியோடு நாட்டின் பிரதமர் பதவிக்கு வந்தவர். மோடி அடைந்தது ஒரு சிறந்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அவரது போட்டியாளர்களை எளிதாக தோற்கடித்தார்.

வாரணாசியில் நான் அவரை தோற்கடிப்பேன், அவர் வெற்றி பெற்றால் நான் இந்தியாவை விட்டு விலகுவேன். இப்படி பல தலைவர்கள் அரை கூவல் விடுத்தனர். ஆனால் அனைத்தும், மோடியின் முன்பு தவிடுபொடியானது.

வாரணாசியில் மோடியை தோற்கடிப்பேன்

வாரணாசியில் மோடியை தோற்கடிப்பேன்

ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், மோடிக்கு எதிராக வாரணாசியில் இருந்து போட்டியிட மோடி முடிவு செய்தார். கெஜ்ரிவால் கங்கையில் மூழ்கி பரிசுத்தப்படுத்திக் கொண்டதாக அறிவித்து பிரசாரம் தொடங்கினார். வாரணாசியில் மோடியை தோற்கடிபபேன் என கேஜ்ரிவால் கூறிய செய்தி நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வந்திருந்தது.

மோடி பிரதமர் ஆகவே முடியாது

மோடி பிரதமர் ஆகவே முடியாது

மிகவும் கவனிக்கத்தக்க வெற்றி என்பது, உத்தரபிரதேசத்தில் மோடி மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றதுதான். பிரதமர் பதவிக்கு ஓடுவதற்கு உ.பி. பாஜகவுக்கு மிகப் பெரும்பான்மை வழங்கியது. ஆனால் மீரட் / ஷரன்பூர் உள்ளிட்ட உ.பி. நகரங்களில் வெளியான சில பத்திரிகைகளில், "மோடி எப்போதும் பிரதமராக முடியாது: முலாயம் சிங் யாதவ். " என்ற செய்தி தலைப்பு செய்தியாக அப்போது வெளியிடப்பட்டது.

மொய்லி என்ன சொன்னார்

மொய்லி என்ன சொன்னார்

மார்ச் 19, 2014. அதாவது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு முன், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியும் மோடிக்கு சவால் விடுத்தார்.

"மோடி எப்போதும் பிரதமராக மாட்டார்" என்றார். அதுவும் தலைப்பு செய்தியாக வந்தது.

நாட்டை விட்டு வெளியேறுவேன்

நாட்டை விட்டு வெளியேறுவேன்

மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என கூறியவர்கள் பலர். எழுத்தாளர் யு ஆர் அனந்தமூர்த்தியும் அதில் ஒருவர். ஆனால் அப்படி கூறிய பிரமுகர்கள் யாருமே மோடி பிிரதமரான பிறகு நாட்டை விட்டு வெளியேறவேயில்லை.

English summary
As Modi completes 3 years in office, here are the headlines that had said he would never become the PM.It has been three years since Narendra Modi became the Prime Ministerof India. It was no doubt an emphatic victory that Modi scored to defeat his rivals. The headlines in the media did make for some interesting reading although headers such "Modi" sounded sensationalbut lazy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X