For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் 5 ஆண்டுகளில் 2வது முறையாக கதிர்வீச்சு.. தலைநகரின் பாதுகாப்பு கேள்விக்குறி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இன்று கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தலைநகர் டெல்லி கதிரியக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், துருக்கியில் இருந்து வந்திருந்த சரக்கு ஒன்றில் இருந்து இன்று மதியம் கதிரியக்கம் வெளியானது. இதனால், இரு ஊழியர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது. நியூக்ளியர் மெடிசின் பொட்டலத்தில் இருந்து இந்த கதிர்வீச்சு வெளியானது தெரியவந்துள்ளது.

Radioactive leak- Delhi's second in five years

2010லும் இதேபோல, டெல்லி மாயபுரியில் ஒரு சம்பவம் நடந்தது. மாயபுரி என்பது தொழில்பேட்டை பகுதியாகும். அங்கு கதிரியக்கம் ஏற்பட்டதில், பலர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபால்ட் 60 என்ற மூலப்பொருளை சிலர் தெரியாமல் தூண்டிவிட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Radioactive leak- Delhi's second in five years

தலைநகர் டெல்லியில் இதுபோன்ற கதிரியக்க பாதிப்பு ஏற்படுவது அதன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

English summary
This is the second time that the Delhi is witnessing a radio active leak. While today’s incident was a result of a package containing nuclear medicine being damaged in 2010 a similar incident had occurred in Mayapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X