For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படி என்ன சாதித்தார் ரகுராம் ராஜன்... இதைப் படியுங்க...

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தமக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரகுராம் ராஜன் போனால் போகட்டும் என சுப்பிரமணியன் சுவாமி போன்ற வலதுசாரிகள் கூச்சலிடுகிறார்கள்... ஆனால் ரகுராம் ராஜன் போய்விட்டால் இந்தியாவின் எதிர்கால "இருட்டு" குறித்து பெரிதும் கவலை கொள்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Raghuram rajan and Indian Economy

அப்படி என்னதான் செய்தார் ரகுராம் ராஜன்?

2013-ல் ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியேற்ற போது நாட்டின் நிலைமை இதுதான்..

  • நாட்டின் பொருளாதாரம் தத்தளித்தது
  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக இருந்தது.
  • நாட்டின் பணவீக்கம் 10%-க்கு மேல் அதிகரித்திருந்தது.
  • அந்நிய முதலீடுகள் வேகமாக வெளியேறின.

ரகுராம் ராஜன் பதவியேற்ற பின்னர்....

  • அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெறுவது நிறுத்தப்பட்டது
  • சில மாதங்களிலேயே 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு இந்தியாவுக்கு வந்தது.
  • நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போகாமல் தடுக்கப்பட்டது.
  • இதற்காகவே ஊடகங்கள் "ராஜன் எபெக்ட்" என புகழாரம் சூட்டின.
  • 10% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆகக் குறைக்கப்பட்டது.
  • சிறு வங்கிகளுக்கான உரிமங்களை அதிகப்படுத்தினார்.
  • வாரா கடன்கள் குறித்து வெளிப்படைத்தன்மையை உருவாக்கினார்
  • வங்கிகள் தங்களது நட்டங்களை பதிவு செய்தது
  • வங்கிகள் தங்களது வாரா கடன்களை வசூலித்து நிதிநிலவரத்தை சரி செய்ய கெடு வைத்தார்.
  • கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினார்.
  • நாட்டின் சகிப்பின்மை தன்மை வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைத்தார்.

ரகுராம் ராஜனுக்குப் பின்னர் என்னவாகும்?

  • உலகமே பொருளாதார மந்த நிலையை நோக்கி நகரும்போது இந்தியாவும் தப்பாது
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும்.
  • வாரா கடன்களை வசூலித்தல் உள்ளிட்ட ராஜன் நடவடிக்கைகள் அப்படியே நிறுத்தப்படும்
  • இந்திய பொதுத்துறை வங்கிகளின் நிலைமை மேலும் படுமோசமாகும் அபாயம்
English summary
Here are some points on RBI Governor Raghuram Rajan's Achievements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X