For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

56 நாட்கள் லீவ் ஓவர்... அரசியலில் ராகுல் மீண்டும் 'பிஸி'! 4 மாநில விவசாயிகளுடன் ஆலோசனை!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 56 நாட்கள் லீவில் சென்று விட்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று 4 மாநில விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக டெல்லியில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் பேரணியிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

அரசியல் பணிகளிலிருந்து லீவ் போட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓய்வில் சென்றிருந்த ராகுல் காந்தி 56 நாட்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் நாடு திரும்பினார். அவரது இந்த ஓய்வு அரசியல் வட்டாரங்களில் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தற்போது நாடு திரும்பியுள்ள ராகுல் காந்தி டெல்லியில் நாளை நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிரான விவசாயிகள் பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த பேரணிக்கு முன்னதாக டெல்லியில் தமது இல்லத்தில் இன்று 4 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நில ஆர்ஜித அவசரச் சட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை அவர் கேட்டந்தார்.

டெல்லி பேரணியில் நாளை பங்கேற்ற பின்னர் அடுத்த சில நாட்களுக்குள் தனது தொகுதியான அமேதிக்குச் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறியவும் ராகுல் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Congress vice president Rahul Gandhi was back in action on Saturday after he met farmers over land bill in Delhi, a day before the party's big kisan rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X