For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் 'மோடிஜி'யை 'ஒபாமாஜி' பாராட்டியது இதுக்குத்தானுங்க... நாடாளுமன்றத்தில் 'கலாய்த்த' 'ராகுல்ஜி'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரொம்பவே கலக்கி வருகிறார். இன்று நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தை நாடாளுமன்ற லோக்சபாவில் கையிலெடுத்த ராகுல், பிரதமர் மோடியை கலாய்த்துவிட்டார்..

லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியதாவது:

Rahul Gandhi's Comment on Obama's Praise for PM Modi Had a Point

காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் இருந்த போது டைம்ஸ் பத்திரிகையை பார்த்தேன். அதில் ஒபாமாஜி, பிரதமர் மோடிஜியை பாராட்டி மிக நீண்ட குறிப்பு எழுதியிருக்கிறார்.

அமெரிக்கா கார்ப்பரேட் நிறுவனங்களின் தேசம்... இந்திய பிரதமர் ஒருவரை 60 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா அதிபர் பாராட்டியிருக்கிறார்.. இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யாவின் அதிபராக இருந்த மிச்செல் கோர்ப்பசேவை அப்போதைய அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். ஏனெனில் அமெரிக்காவுக்கு உதவியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் இருந்தார் கோர்ப்பசேவ்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

கடந்த வாரம் டைம் பத்திரிகை கருத்துக்கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியல் வெளியானது. டைம் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பு எழுதி வெளியிட்டிருந்தார்.

அந்த வகையில் பிரதமர் மோடியைப்பற்றி ''இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்தவாதி' என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்து ஒபாமா எழுதி பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

இந்த பாராட்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேசிய ராகுல், "நெட் நியூட்டிராலிட்டி விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மோடி செயல்படுகிறார்... கோர்ப்பசேவ் போலவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் மோடி.. அதனால்தான் ஒபாமா பாராட்டியிருக்கிறார்" என்று ரொம்ப மெச்சூரிட்டியாக கோர்த்துவிட்டு "வஞ்சப் புகழ்ச்சியாக' கலாய்த்திருக்கிறார்..

ஆஹா தேறிவிட்டாரே!

English summary
Rahul Gandhi today dedicated some of his speech in Parliament to praise for Prime Minister Narendra Modi, or rather, US President Barack Obama's praise for him. For a short while, there were some baffled faces on both the ruling and opposition benches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X