For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகிப்பின்மை....விமர்சனம் செய்தால் மிரட்டுவதா? அவதூறு பரப்புவதா? ஆமிர் கானுக்கு ராகுல் காந்தி ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் சகிப்புத்தன்மை குறித்து விமர்சனத்தை முன்வைத்த நடிகர் ஆமிர் கானை மிரட்டும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. இது கவலை தருகிறது; மேலும் நாட்டை விட்டே வெளியேறி விடலாமா என்று மனைவி என்னிடம் கேட்டார் என்பதுதான் ஆமிர் கான் தெரிவித்த கருத்து. இக்கருத்துக்கு ஆதரவாக எதிராக பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Rahul tweets support for Aamir Khan

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜூ, ஆமிர் கானின் விமர்சனம் இந்தியாவின் மதிப்பை கெடுப்பதாக இருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் மத வன்முறைகள் குறைந்துள்ளன எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆமீர் கானுக்கு ஆதரவாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு, மோடி குறித்து கேள்வி எழுப்பினால் தேசப்பற்று இல்லாதவர்கள்; தேசதுரோகி; உள்நோக்கத்துடன் பேசுகின்றனர் என முத்திரைதான் குத்துகின்றனர்; இதற்கு பதிலாக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

அவதூறு பரப்புவது, மிரட்டுவது, சித்ரவதை செய்வது என்பது இந்தியா எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு தீர்வுகாணும் முறை அல்ல...

English summary
Congress vice-president Rahul Gandhi on Tuesday said the government should not bully or threaten people who question it as he came out in support of actor Aamir Khan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X