For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில்வே பட்ஜெட்: பயணிகள் கட்டணம் உயராது- 'பால் வார்த்த' சுரேஷ் பிரபு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 2015-16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு லோக்சபாவில் பகல் 12.10 மணியளவில் தாக்கல் செய்தார். பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்படாது என்று கூறி பயணிகளின் வயிற்றில் பால்வார்த்தார் அமைச்சர் சுரேஷ்பிரபு.

Railway budget 2015-16: No increase in Passengers fares Says Suresh Prabu

தூய்மை, வறுமை ஒழிப்பை இலக்காக கொண்டு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். ரயில்வே லாபகரமாக செயல்படுவது உறுதி செய்யப்படும் மேலும் ரயில் துறையில் கூடுதல் முதலீடு வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ரயில்வே வேகத்தை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் மேலும் நெரிசல் மிக்க தடத்தில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரயில்கள் சரியான நேரத்துக்கு செல்வது உறுதி செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

சரக்கு ரயில்பாதைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் தொலைநோக்கு திட்டத்துக்கு பாதகமின்றி உடனடி தேவை நிறைவேற்றப்படும் என ரயில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2030 வளர்ச்சி இலக்கு

2030 வளர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில் வசதி இல்லாத ஊர்களுக்கு ரயில் இணைப்பு தருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் ரயில் சேவை மேம்படுத்தப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

பயணிகள் பாதுகாப்பு

ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தமது 2-வது இலக்காகும் மற்றும் ரயில்வே நவீன மயம் என்பது தமது 3-வது அலக்கு எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

தூய்மைக்கு முக்கியத்துவம்

ரயில் நிலையங்களின் தூய்மையை கண்காணிக்க, மேம்படுத்து தனியாக ஒரு துறை உருவாக்கப்படும். ரயில் நிலையம், ரயில் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும். 17 ஆயிரம் ரயில்வே கழிப்பறைகள் அகற்றப்பட்டு அவை பயோ-கழிப்பறைகளாக மேம்படுத்தப்படும்

பயணிகள் ரயில் கட்டணம்

ரயில்பயணிகளின் கட்டணம் உயர்வில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையை பல்வேறு வகைகளிலும் மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுக்கான லட்சியம்:

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

1.வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தப்படும்.

2. ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

3. ரயில்வே கட்டுமானம் நவீனப்படுத்தப்படும்.

4. ரயில் இருப்புப் பாதை தூரம் நீட்டிக்கப்படும்.

நிதிப்பற்றாக்குறை

ரயில்வே துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். ரயில்வே துறையை தொடர்ந்து முடக்கி வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன என்றார்.

English summary
Railway Minister Suresh Prabhu on Thursday set a difficult financial objective for Indian Railways in his first Budget speech. Railways will aim to up the operating ratio to 88.5 per cent in the fiscal year 2015-16, Mr Prabhu said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X