For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருவாய் இழப்பை தவிர்க்க கட்டண சலுகைகளை ரத்து செய்யும் ரயில்வே?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வருவாய் இழப்பை தவிர்க்க ரயில்வே துறை அளிக்கும் கட்டண சலுகையை பெருமளவுக்கு ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிப்போரில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று 53 பிரிவினருக்கு மத்திய அரசு கட்டண சலுகை அளித்துள்ளது. மூத்த குடிமக்கள் கட்டணத்தில் பாதி செலுத்தினால் போதும். 53 பிரிவில் உள்ளவர்களில் சிலர் முழு கட்டண சலுகையை பெறுகின்றனர்.

Railways to cancel ticket concessions?

இந்த கட்டண சலுகைகளால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த வருவாய் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் கட்டண சலுகைகள் குறித்து ஆய்வு செய்ய, செலவுகளை குறைக்க 9 பேர் கொண்ட குழுவை ரயில்வே வாரியம் அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அளித்துள்ளது.

கட்டண சலுகையை பெருமளவுக்கு ரத்து செய்ய அக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை வரும் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு கட்டண சலுகைகள் பெருமளவுக்கு ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Railways has been recommended to cancel most of the ticket concessions to aviod loss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X