ராஜ்நாத்தின் முசாபர்நகர் பயணம் ரத்து! உ.பி. ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை!!

By:
Subscribe to Oneindia Tamil

Rajnath Singh cancels visit to Muzaffarnagar
டெல்லி: இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட முசாபர்நகருக்கு செல்ல இருந்த பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் அகதிகளாயினர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் பகுதியை பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாநில அரசு கேட்டுக் கொண்டதால் ராஜ்நாத்சிங்கின் முசாபர்நகர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முசாபர்நகர் பகுதிகளுக்கு ஏற்கனவே செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் ராஜ்நாத்சிங்கும் தடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும். முசாபர்நகர் வன்முறை தொடர்பாக ஜனாதிபதியிடம் அறிக்கை ஒன்றை தர இருக்கிறோம் என்றார்.

English summary
BJP president Rajnath Singh cancelled his visit to riot-hit Muzaffarnagar after being advised by the district magistrate of the region on Saturday.
Please Wait while comments are loading...