For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

By Mathi
Google Oneindia Tamil News

RBI Governor urges Centre to de-regulate diesel prices
மும்பை: டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரகுராம் ராஜன் பேசியதாவது:

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், டீசல் விலையை மத்திய அரசும் தற்போது நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் விலையைப் போலவே டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும். அதுவும் சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதுதான் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை அரசு முற்றிலுமாக கைவிடுவதற்கு ஏற்ற தருணம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் திட்டம் சிறந்த திட்டம். ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அவசரம் காட்டக் கூடாது.

வங்கிக் கடன் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் கடன் தரும் முன்பாக மேற்கொள்ளும் பரிசீலனைகளை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.

English summary
Even as the government is continuing with a phased de-regulation of diesel prices, RBI Governor Raghuram Rajan has urged the Centre to completely de-regulate diesel prices. Rajan on Monday said diesel price de-regulation is especially important in the wake of rising global crude oil prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X