For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.1 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி!

இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1கோடி அபராதம் விதித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1கோடி அபராதம் விதித்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர்கள் அதிகளவு பண பரிமாற்றம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பணப்பரிமாற்றம் தொடர்பான கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கி முறையாக பராமரிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

RBI imposes Rs 1 cr penalty on Union Bank of India for KYC non-compliance

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பணப்பரிமாற்றம் குறித்த தகவல்களை முறையாக பராமரிக்காத புகாரில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வங்கியின் ஒழுங்குமுறை இணக்கத்தன்மையின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள சில கணக்குகளில், ரொக்கமாக அதிகளவு பணம் வரைமுறையின்றி செலுத்தப்படுவதகாவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் போதுமான ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இல்லாததால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

English summary
The Reserve Bank of India had earlier this week imposed a monetary penalty of Rs. 10 million on Union Bank of India for non-compliance with the directions issued by the apex bank on Know Your Customer norms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X