For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை மக்கள் ரொம்ப நல்லவங்க.. கீழே கிடக்கும் பர்ச கூட எடுப்பதில்லையாம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் பணம் தொடர்பான நேர்மை எப்படி உள்ளது என்பது குறித்து பத்திரிகையொன்று ரியாலிட்டி ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைவிட, மும்பை மக்கள் நேர்மை குணம் உள்ளவர்கள் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஊடகம், உலகிலுள்ள 16 முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் நேர்மையை சோதித்து பார்க்க திட்டமிட்டது. இதற்காக 50 அமெரிக்க டாலருக்கு சமமான உள்ளூர் பணத்தை பர்சுகளில் வைத்து தெருவில் போட்டனர்.

Reality check-up among 16 world city to see how many cities return mony filled wallet

ஒவ்வொரு நகரத்திலும் தலா 12 பர்சுகள் என, 16 நகரங்களில் மொத்தம் 192 பர்சுகளை பணத்துடன் போட்டுள்ளனர். அந்த பர்சில் பர்ஸ் உரிமையாளர் பெயர், போன் நம்பர், குடும்ப போட்டோ, விசிட்டிங் கார்டு ஆகியவையும் வைத்து போடப்பட்டது.

உலக அளவில் ஃபின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சின்கி நகர மக்கள் இந்த தேர்தலில் முதல் மாணவர்களாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அங்கு 12 பர்சில், 11 பர்ஸ்கள் உரியவர்களிடமே திரும்ப வந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மும்பையில்தான் 9 பர்சுகள் திரும்ப வந்துள்ளன.

வறுமையின் பிடியில் சிக்கிய நாடு, லஞ்சம் பெருக்கெடுத்த நாடு என்ற தோற்றம் கொண்ட இந்தியாவின் ஒரு நகரத்தில் 12 பர்சுகளில் 9 திரும்பி வந்துள்ளதை வைத்து பார்க்கும்போது இந்தியர்கள் நேர்மை மிகவும் பெரிது என்று வர்ணித்துள்ளது அந்த ஆங்கில ஊடகம்.

இதில் மோசமான இடம் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பான் நகருக்கு கிடைத்துள்ளது. அங்கு ஒரே ஒரு பர்ஸ்தான் திரும்பி வந்துள்ளது. ஸ்பெயின், உலக பணக்கார நாடான ஸ்விட்ச்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்தான் மக்கள் பர்சை அதிகம் 'ஆட்டை' போட்டுள்ளனர். நீங்களே இந்த மேப்பை பார்த்து மக்களின் மன நிலையை தெரிந்துகொள்ளுங்கள்.

English summary
Reader's digest conduct a reality check-up among 16 world city to see how many cities return money filled wallet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X