For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடி ஆஃபர்களுடன் செப்.5ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவை! முகேஷ் அம்பானி அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவதி்தார். டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி கூறியதாவது: ரிலையன்ஸ் நிறுவனத்தில் 60 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள், ஜியோ முழுக்க இளைஞர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

RelianceJio From 5th Sept

பிற நெட்வொர்க்குகளை ஒப்பிட்டால் 10ல் ஒரு பங்கு குறைந்த கட்டணத்தில் இணையதள சேவையை வழங்க உள்ளோம். அதாவது ஜியோ ஒரு எம்பிக்கு வெறும் 5 பைசாவைத்தான் வசூலிக்க உள்ளது. அதாவவது ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.50 மட்டுமே. இந்த கட்டணம் ரூ.25 என்ற அளவில் கூட குறையலாம்.

RelianceJio From 5th Sept

செப்டம்பர் 5ம் தேதி திங்கள்கிழமை, விநாயகர் சதுர்த்தி முதல், ரிலையன்ஸ் ஜியோ சேவை நாடு முழுக்க கிடைக்க உள்ளது. அன்று முதல் டிசம்பர் 31ம் தேதிவரை அனைத்து வகை சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.

வாய்ஸ் கால்கள் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படும். மேலும், நாடு முழுக்க ரோமிங் கட்டணமும் கிடையாது. வரும் 5ம் தேதிக்கு பிறகு இந்தியா முழுமையாக மாற உள்ளது. இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில், ஜியோ டேட்டா சர்வீசையும் அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
RelianceJio From 5th Sept to Dec 31, 2016 Jio data, voice will be totally free: Mukesh Ambani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X