For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சருக்கு 'சல்யூட்' அடிக்காமல் ஜம் என்று உட்கார்ந்திருந்த டிஜிபி- களைகட்டும் கேரள சர்ச்சை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் வருகையின் போது கூடுதல் டி.ஜி.பி, அமைச்சருக்கு சல்யூட் அடிக்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று முன்தினம் போலீஸ் அகாடமி விழாவில் கலந்து கொள்ள வந்த உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா மேடையில் ஏறினார்.

 Rishiraj Singh Dismisses Allegation of Misconduct

அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் எழுந்து நின்று அமைச்சருக்கு சல்யூட் அடித்தனர். ஆனால், இருக்கையில் அமர்ந்திருந்த கூடுதல் டி.ஜி.பி ரிஷிராஜ் சிங், எழுந்திருக்காமல் பெண் போலீசாரின் அணிவகுப்பை பார்த்தவண்ணம் இருந்தார்.

அமைச்சர் வந்தபோது ரிஷிராஜ் சிங் அமர்ந்த நிலையிலிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி காரசாரமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ரிஷிராஜ் சிங் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், ''மேடையின் பின்புறமிருந்த அமைச்சர் வந்தார். முன்புறம் நடந்த அணிவகுப்பை பார்த்துக் கொண்டிருந்ததால் அமைச்சர் வந்ததை கவனிக்கவில்லை. இவ்விஷயத்தில் நான் தவறேதும் செய்யவில்லை,'' என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சென்னிதலா, ''திருச்சூர் போலீஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்து யார் மீதும் நான் புகார் சொல்ல வில்லை. மரபு மீறப்பட்டதா என்பது குறித்து மாநில டி.ஜி.பி தான் கண்டறிய வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில்

English summary
ADGP Rishiraj Singh on Saturday said he did not breach the protocol at the function attended by Home Minister Ramesh Chennithala at the Police Academy in Thrissur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X