For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1.5 கோடி மகளுக்கு வரதட்சணை கொடுத்த டீக்கடைக்காரர்... சம்மன் அனுப்பிய ஐடி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டீ வியாபாரி தனது மகள்களுக்கு ரூ.1.5 கோடி வரதட்சணை வழங்கியுள்ளார். அவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: மகளின் திருமணத்திற்காக கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கொடுத்த டீக்கடைக்காரருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த டீக்கடைக்காரர் தலைமறைவாகி விட்டார்.

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின்னர் கறுப்பு பணம், கள்ள பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒவ்வொரு பண பரிவர்த்தனையும் வருமான வரித்துறையின் பார்வைக்கு செல்கிறது.

Rs 1.51 crore dowry - Income Tax summons tea seller

ராஜஸ்தான் மாநிலம் கோத்புட்லி என்ற இடமருகே ஹடுவாடா என்ற பகுதியை சேர்ந்தவர் ராம் குஜார். டீக்கடை நடத்தி வரும் இவர் தனது மகள் திருமணத்திற்காக ரூ.1.5 கோடி வரதட்சணை பணம் கொடுத்துள்ளார்.

இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகன் வீட்டாருக்கு கட்டுக்கட்டாக பணத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார். இந்த பணத்தை பலர் ஊர் முக்கியபிரமுகர்கள் முன்னிலையில் மணமகன் வீட்டாரிடம் கொடுத்தார். இதனை சிலர் வீடியோக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

இதையடுத்து, இந்த விவாகாரம் வருமான வரித்துரை கவனத்திற்கு சென்றது. பணம் சம்பாதித்ததன் மூலாதாரம் குறித்து விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் பணம் சம்பாதித்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், குஜ்ஜார் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.

இதனால் தவறான வழியில் சம்பாதித்த பணமா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு கோடிக்கணக்கில் வரதட்சணைக் கொடுக்கப் போய் இப்படி மாட்டிக்கொண்டாரே என்று ஆதங்கப்படுகின்றனர் உறவினர்கள்.

English summary
A tea seller has come under the radar of the Income Tax department after he coughed up Rs 1.51 crore as dowry for his daughters for their wedding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X