For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கௌரவம்.. உருவப்படத்துடன் ரூ.10, ரூ.100 நாணயங்கள் வெளியிடுகிறது மத்திய அரச

எம்.எஸ்.சுப்புலட்சுமியை கௌரவிக்கும் வகையில் ரூ.10, ரூ.100 நாணயங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக இசை கலைஞர் எம்எஸ் சுப்புலட்சுமியை சிறப்பிக்கும் வகையில் ரூ.100, ரூ.10 நாணயங்கள் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக சங்கீதத்தில் கொடி கட்டி பறந்தவர் எம்எஸ் சுப்புலட்சுமி. இவர் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ராமன் மகசசே விருது, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

Rs 100 coin to commemorate birth centenaries of MS Subbulakshmi

அவரது நூற்றாண்டு பிறந்த தினம் கடந்த செப் 14-இல் கொண்டாடப்பட்டது. இந்த விழா நிறைவடைவதையொட்டி அவரை கௌரவிக்கும் வகையில் அவர் முகம் பதித்த நாணயங்கள் வெளியிட கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஸ்ரீ சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபா வைத்தது.

அதனையேற்ற மத்திய அரசு இன்று எம்எஸ் சுப்புலட்சுமியின் முகம் படம் பதித்த ரூ.100, ரூ.10 நாணயங்களை வெளியிடுகிறது. இதேபோல் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டியும் அவரது உருவம் பதித்த நாணயங்களை வெளியிட தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
The government has decided to come out with Rs 100 and Rs 10 coins commemorating the birth centenary of noted Carnatic singer and Bharat Ratna awardee late M S Subbulakshmi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X