For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. ரயில் விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி உதவி.. ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ..50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

அதேபோல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சையளிக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநிலத்தின், முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டிவிட்டர் மூலம், இந்த நிகழ்வு குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சகமும், மாநில அரசும் உரிய உதவிகளை செய்வதாக குறிப்பிட்டுள்ள மோடி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கூறியுள்ளதோடு, இந்த விபத்தால் மிகவும் வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் மோடி டிவிட்டுகளில் குறிப்பிடுள்ளார்.

இதேபோல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், இந்த விபத்து குறித்து தனது இரங்லை தெரிவித்துள்ளார்.

English summary
Ex gratia of Rs.3.5 Lakh for those who lost their lives,Rs.50 thousand for seriously injured. And Rs.25 thousand for people with minor injuries in the unfortunate accident has being announced by Union Railway minister Suresh Prabhu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X