சிறையில் எனக்கு எந்த சிறப்பு வசதியுமே இல்லை- விசாரணை குழுவிடம் புளுகிய சசிகலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சிறையில் தமக்கு எந்த ஒரு சிறப்பு வசதியுமே இல்லை வினய்குமார் தலைமையிலான விசாரணை குழுவிடம் சசிகலா பொய் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவின் சொகுசு சிறை வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதையடுத்து கர்நாடகா அரசு வினய்குமார் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

இக்குழு பெங்களூரு சிறையில் விசாரணை நடத்தியது. சசிகலா, முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெற்றது.

கைதிகள் உதவி இல்லை

கைதிகள் உதவி இல்லை

இதில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில், என் மீது கைதிகள் அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் சிறிய உதவிகளை செய்கிறார்கள்.

தவறான தகவல்கள்

தவறான தகவல்கள்

ஆனால் உடற்பயிற்சி செய்யவோ மற்ற சிறப்பு வசதிகளை அனுபவிக்கவோ எந்த ஒரு வசதியுமே அறையில் இல்லை. அப்படி அறையில் வசதிகள் இருப்பதாக வெளியான தகவல்கள் அத்தனையுமே தவறானவை.

வெள்ளை உடை இல்லை

வெள்ளை உடை இல்லை

சிறையில் வெள்ளை உடைதான் நான் அணிய வேண்டும் என்பதில்லை. சிறை விதிகளின்படி நான் வெள்ளை உடை அணிய வேண்டியது இல்லை.

இவ்வாறு சசிகலா வாக்குமூலம் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Anand Raj Slammed Sasikala-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Sasikala has denied the special facilities in jail.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்