For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்மாவட்டத்தில் ஜாதிகலவரத்தை உருவாக்க முயற்சி: சசிகலா புஷ்பா 'திடுக்' புகார்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தம்முடைய பிரச்சனையை முன்வைத்து தென்மாவட்டத்தில் ஜாதிகலவரத்தை உருவாக்க முயற்சி நடப்பதாக அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

Sasikala Natarajan creats Tension in Southern TN, says Sasikala Pushpa

சசிகலா நடராஜன் என்ற தனிநபர் மீது புகார் கூறினால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது எம்ஜிஆர் பத்திரிகையில் என்னை தாக்கி மோசமாக எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டி ஒட்டுகின்றனர்.

என் பிரச்சனையை வைத்து தென்மாவட்டத்தில் ஜாதிக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துகிடக்கிறது.

டெல்லியில் பேட்டி கொடுத்தால் தமிழகத்தில் உடனே வழக்கு போடுமாறு போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். என் மீது துரும்புபட்டாலும் எனக்கு எது நடந்தாலும் அதற்கு சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

சசிகலா நடராஜன் தரப்பை தைரியமாக எதிர்க்கக் கூடியவர் என்பதாலே எனக்கு முதல்வர் ஜெயலலிதா பொறுப்புகளைக் கொடுத்தார்.

இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.

English summary
Expelled ADMK MP Sasikala Pushpa alleged that Tamilnadu CM Jayalalithaa's close aide Sasikala Natarajan and her Family created tension in southern Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X