டிஐஜி ரூபாவுடன் வாய்ச்சண்டையிட்டு ரெய்டை தடுக்க முயன்றாரா சசிகலா?.. பரபர தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தமது சொகுசு அறைகளை படம்பிடித்த டிஐஜி ரூபாவை தடுத்து நிறுத்தி சசிகலா வாய்ச்சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனையை பெங்களூரு சிறையில் அனுபவித்து வருகிறார் சசிகலா. சிறைக்குள்ளேயும் கூட சசிகலா ரூ2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார் என அம்பலப்படுத்தினார் டிஐஜி ரூபா.

ரூபா தூக்கியடிப்பு

ரூபா தூக்கியடிப்பு

இந்த விவகாரத்தால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

5 அறைகள், குக்கர்

5 அறைகள், குக்கர்

அத்துடன் சசிகலா சிறையில் 5 அறைகளை பயன்படுத்தியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் குக்கர் வைத்து தனி சமையல் செய்து சாப்பிட்டதும் ஆதாரங்களுடன் வெளியாகிவிட்டது.

டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

இதனிடையே ரூபா பணியிட மாற்றத்தைக் கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் பெங்களூரு சிறையில் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

படம் பிடித்த ரூபா- தடுத்த சசி

படம் பிடித்த ரூபா- தடுத்த சசி

மேலும் சிறைக்குள் சசிகலா தர்பார் நடத்தியதை டிஐஜி ரூபா முழுமையாக படம் பிடித்திருக்கிறார். அப்படி படம் பிடித்தபோது நைட்டி உடையில் இருந்த சசிகலா டிஐஜி ரூபாவை தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். அத்துடன் ரூபாவுடன் வாய்ச்சண்டையும் போட்டிருக்கிறார் சசிகலா.

Sasikala and Ilavarasi entering in Jail after roaming outside in Bengaluru-Oneindia Tamil
வீடியோக்கள் வைரல்

வீடியோக்கள் வைரல்

இது தொடர்பான வீடியோக்களும் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Sources said that Sasikala was opposed to DIG Roopa's inspection in her Prison room.
Please Wait while comments are loading...