இப்பவே இப்படின்னா! இதுக்கு முன்னாடி என்னவெல்லாம் செய்திருப்பார் சசிகலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு சிறையில் அப்பட்டமாக சிறை விதிகளை மீறியுள்ளார் என்றும் அதற்கான சான்றுகளாக வீடியோ காட்சிகள் பரவி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. சசிகலா செல்வாக்கு என்ன என்பதை இந்த வீடியோக்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில் பழைய பழமொழியாக இருந்தாலும், 'பணம் பாதாளம் வரைக்கும் பாயும்' என்பதை மிக அழுத்தமாக சசிகலா நிரூபித்துள்ளார்.

Sasikala's atrocity in bangalore parappana agrahara central prison

பணத்துக்காக விலைபோகும் மன சாட்சியை விற்ற அதிகாரிகள் தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் சசிகலாவுக்கு கிடைத்திருக்கிறார்கள். காவிரியில் நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு, சசிகலாவிடம் பணம் வாங்க கூசாத அதிகாரிகளை வைத்து எப்படி இயங்க முடிகிறது?

நாடே அறிந்த வழக்கில், சிறைத்தண்டனை மற்றும், அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா பணத்தால் , சட்டத்தை வளைத்துள்ளார். "30 ஆண்டுகளாக ரெண்டு பெண்கள்தானே தமிழக அரசியலை ஆட்டி வைத்தோம்...இப்போது என்ன நடந்திடப் போகுது? நாங்க பாக்காததா?" என்று சசிகலா கூவத்தூரில் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். அதை இப்போது பெங்களூருவிலும் நடத்தி காட்டியிருக்கிறார்.

சிறையில் இருக்கும்போதே இப்படி எனில் இதற்கு முன்னர் எப்படியெல்லாம் சசிகலா செய்திருப்பார்? அதிரவைக்கிறதே!

Sasikala enjoying all facilities within prison, photos leaked-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
ADMK Amma team GS Sasikala's atrocity in bangalore parappana agrahara central prison.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்