பீதி கிளப்பும் சசி லீக்ஸ்.. குக்கர், மெத்தை.. சசிகலா ஒரு கைதி போலவே பொழுதைக் கழிக்கல போலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : பணம் பாதாளம் என்ன பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள்ளும் கூட தாராளமாக பாயும் என்பதை நிரூபித்துள்ளது சசி லீக்ஸ் படங்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் எக்கச்சக்கமாக பலரையும் மிரட்டி ஜெயலலிதா பெயரைப் பயன்படுத்தி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா உயிரிழந்து விட்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 விதி மீறல்

விதி மீறல்

சசிகலாவிற்கு சிறையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவதாக டிஐஜி ரூபா தெரிவித்திருந்தார். இது இரண்டு காவல் அதிகாரிகளிடையேயான சண்டை என்று கூட சில விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டது என்ற புகைப்படங்கள் வெளியாகின.

 ஐந்து தனித் தனி அறைகள்

ஐந்து தனித் தனி அறைகள்

அடுத்தடுத்து உள்ள 5 அறைகள் சசிகலாவிற்காக ஒதுக்கப்பட்டு, வீடு போல சிறையிலேயே வாழ்ந்து வருகிறார் சசிகலா. வரவேற்பரை, குக்கர் வைத்து சமைக்க ஒரு இடம், கழிவறைக்கு ஒரு அறை, யோகாசனம் செய்ய ஒரு அறை என்று பாய் படுக்கை மெத்தை என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 கம்பி கேட்டுக்கு டிரஸ் வேறு!

கம்பி கேட்டுக்கு டிரஸ் வேறு!

இது போதாதென்று சிறைக் கம்பிகள் வெள்ளை நிற ஆடை கொண்டு மூடப்பட்ட கட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறை என்பது சிறிய ஒளி புகாத அறை போல இருக்கும், உணவு, கழிவறை என்று அனைத்துமே அந்த ஒரே அறைக்குள் தான் இருக்கும்.

 காசேதான் கடவுளடா..!

காசேதான் கடவுளடா..!

ஆனால் சசி லீக்ஸ் படங்களைப் பார்த்தால் காசே தான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் வாழ்ந்துள்ளார் சசிகலா.

Sasikala enjoying all facilities within prison, photos leaked-Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK general secretary Sasikala enjoying all facilities within prison photos leaked amidst charges raised by DIG Roopa.
Please Wait while comments are loading...