பெங்களூரு ஜெயிலில் இருந்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றம்? கர்நாடக அரசு தீவிர ஆலோசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூரு ஜெயிலில் இருந்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அரசுக்கு கெட்டப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஒவ்வொன்றுக்கும் தனியறை என 5 அறைகளுடன் கொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது டிஐஜி ஆய்வில் அம்பலமாகியுள்ளது. மேலும் சிறப்பு சமையலறையில் குக்கர் வைத்து சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் சசிகலா உதவியாக 2 பெண் கைதிகள் தும்கூர் சிறையில் இருந்து மாற்றப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் சசிகலா அளிக்கப்பட்ட சலுகைகளை வெளிப்படுத்திய டிஐஜி ரூபாவும் நேற்று அதிரடியாக வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

இந்நிலையில் சசிகலாவை வேறு துறைக்கு மாற்ற கர்நாடக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளதால் அரசு இந்த யோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசுக்கு கெட்டப்பெயர்

அரசுக்கு கெட்டப்பெயர்

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்குகிறது. சசிகலா விவகாரத்தால் அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டு, அது சட்டசபை தேர்தலில் எதிரொலித்து விடுமோ என அரசு அஞ்சத் தொடங்கியுள்ளதால் அவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு பாதுகாப்பு

சசிகலாவுக்கு பாதுகாப்பு

கைதிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. இந்த பிரச்சினையால் சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அரசு கருதுகிறது.

கர்நாடக அரசு தீவிர ஆலோசனை

கர்நாடக அரசு தீவிர ஆலோசனை

வரும் நாட்களில் இத்தகைய சிறப்பு வசதிகள் புகார்களை தடுக்க சசிகலாவை கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு மாற்றலாமா? அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா? என்று கர்நாடக அரசு தீவிரமாக ஆலோசிக்க தொடங்கியுள்ளது.

Sasikala enjoying all facilities within prison, photos leaked-Oneindia Tamil
கர்நாடக மாநிலத்திற்குள்ளே?

கர்நாடக மாநிலத்திற்குள்ளே?

கர்நாடகத்திற்குள் வேறு சிறைக்கு சசிகலாவை மாற்றினால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை இல்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு சிறைக்கோ அல்லது வேறு மாநில சிறைக்கோ அவரை மாற்றுவதாக இருந்தால் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி கண்டிப்பாக தேவை என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It has been reported that Sasikala will soon be transferred to another jail from Bangalore jail. The Karnataka government is considering to take this decision to avoid the bad name of the state while ahead of Karnataka assembly elections.
Please Wait while comments are loading...